இன்றைய TOP 10 செய்திகள்: மீண்டும் மேக வெடிப்பு, திமுக அரசை வைச்சு செய்யும் எதிர்க்கட்சிகள்!

Published : Aug 14, 2025, 11:06 PM IST

தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 6 புதிய திட்டங்கள், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் நடந்த மேக வெடிப்பு என இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளைக் கொண்ட தொகுப்பு இது.

PREV
110
ஸ்டாலினுக்கு எதிராக சீறிய விஜய்

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் தொழிலாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறியுள்ளார்.

210
ஸ்டாலினுக்கு தேதி குறித்த எடப்பாடி

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

310
தமிழகத்தில் ஆட்சியா நடக்குது..!

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார். ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு, அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு, இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள்-சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஆகியவை தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளாக உள்ள என ஆளுநர் விமர்சித்துள்ளார்.

410
தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு

சென்னையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் பணியின்போது உயரிழந்தால் இனி ரூ. 10 லட்சம் வழங்கப்படும். சுய தொழில் தொடங்கும்போது தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.

510
காஷ்மீரை உலுக்கிய பேரழிவு!

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 220க்கும் மேற்பட்டோர் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவம், இமயமலைப் பகுதியில் உள்ள மாதா சண்டி கோவிலுக்குச் செல்லும் மச்சைல் மாதா யாத்திரை பாதையில் நிகழ்ந்ததால், யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.

610
கர்நாடகாவுக்குப் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ரஜினிகாந்தின் 171வது படமான கூலி இன்று வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து எளிமையாக, பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்றார்.

710
இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு எதிரான வர்த்தக வரிகளை மேலும் அதிகரிப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்-புதின் சந்திப்பு திருப்திகரமாக அமையாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் மீது மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய 50% வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

810
இந்தியாவின் செஸ் சாதனைகள் - குடியரசுத் தலைவர் பெருமிதம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சுதந்திர தின உரையில் இந்தியாவின் இளம் செஸ் வீரர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பெண்கள் விளையாட்டில் சாதிப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியா விளையாட்டு வல்லரசாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, 18 வயது இளம் வீரரான டி. குகேஷ், இளம் உலக சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் இளம் சதுரங்கப் வீரர்கள் ர.பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் மற்றும் ர.வைஷாலி போன்றோர் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

910
நாய்கள் தொல்லை - ஐடியா கொடுத்த நீதிமன்றம்

''தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும். நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் நாய்களை துன்புறுத்தக் கூடாது'' என்று அரசிடம் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைநகர் டெல்லியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், டெல்லி-NCR பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, அவற்றைச் சிறப்பு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த நாய்களை தெருக்களிலோ, பொது இடங்களிலோ மீண்டும் விடக்கூடாது என்று நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

1010
தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்டதற்கான காரணத்துடன் விவரங்கள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

Read more Photos on
click me!

Recommended Stories