ராஜஸ்தான், பாட்னா மருத்துவ கல்லுரிகள்
2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஆர்என்டி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் ரூ.4,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் மொத்த கட்டணம் ரூ.20,000 மட்டுமே ஆகும். 3வது இடம் பிடித்துள்ள பாட்னாவில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்டு கட்டணம் ரூ.6,000 மட்டுமே. 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30,000 செலுத்தினால் போதும். டெல்லி எய்ம்ஸைப் போலவே, இங்கும் 125 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
4வது இடம் பிடித்துள்ள கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 125 எம்பிபிஎஸ் இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு ஆண்டு கட்டணம் ரூ.6,100. 5 ஆண்டுகளில் ரூ.30,500 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5வது இடம் வகிக்கும் டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் ரூ.12,000 மட்டுமே.