India's cheapest train
நாட்டிலேயே மலிவான ரயில்:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நமோ பாரத், ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்கள் இந்திய ரயில்வேக்கு பெருமை சேர்க்கின்றன. இந்த ரயில்களில் டிமாண்ட் மற்றும் இருக்கைகள் கிடைப்பதற்கு ஏற்ப டைனமிக் கட்டணம் இருக்கும். சில நேரங்களில் இந்த ரயில்களின் கட்டணம் விமான டிக்கெட்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
Garib Rath Train
கட்டணம் குறைவு, வேகம் அதிகம்:
ஆனால் நாட்டின் மலிவான ரயில் ஒன்று இருக்கிறது. ஏசி பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் கட்டணம் மிகக் குறைவு. கட்டணம் குறைவு என்பதால் வேகமும் குறைவு என்று அர்த்தம் இல்லை. வேகத்தைப் பொறுத்தவரை, இந்த ரயில் வந்தே பாரத் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்களுக்கு சவால் விடுகிறது. இந்த ரயில் ஏழைகளின் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
Garib rath express
ஏழைகளின் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்':
இந்தியாவில் விலையுயர்ந்த ரயில்களுக்கு பஞ்சம் இல்லை, பல சொகுசு ரயில்கள் உள்ளன. குறிப்பாக, ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற ரயில்கள் சொகுசான பயணத்தை உறுதிசெய்கின்றன. இவற்றைப் போலவே, ஏழைகளின் ராஜ்தானியும் ஏசி வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. ஆனால் கட்டணம் ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற ரயில்களை விட மிகவும் மலிவானது.
Cheapest train fare in India
கரிப் ரத் ரயிலின் கதை:
இந்தியாவின் மலிவான ரயிலின் பெயர் கரிப் ரத். ஏசி பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 68 பைசா மட்டுமே. இந்தக் கட்டணத்தில் ஏசி கோச்சில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்த ரயில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்கிறது.
Cheapest AC coach train
கரீப் ரத் ரயிலின் தொடக்கம்:
2006ஆம் ஆண்டில், இந்த ரயில் முதன்முதலில் பீகாரில் உள்ள சஹர்சாவிலிருந்து அமிர்தசரஸ் வரை இயக்கப்பட்டது. இன்று, இந்த ரயில் பல்வேறு நகரங்களுக்கு இடையே 26 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இது டெல்லி-மும்பை, டெல்லி-சென்னை, பாட்னா-கொல்கத்தா போன்ற முக்கியமான வழித்தடங்களில் இயங்குகிறது. இந்த ரயிலில் ஆண்டு முழுவதும் கூட்டம் இருக்கும். உறுதியான டிக்கெட் கிடைப்பது கடினம்.
Railways
வந்தே பாரத் ரயிலுக்குப் போட்டி:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வேகம் மணிக்கு 160 கி.மீ. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக தற்போது வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 66 முதல் 96 கி.மீ. ஆக உள்ளது. அதேசமயம் கரிப் ரத் ரயில்கள் சராசரி வேகம் மணிக்கு 70 முதல் 75 கிமீ ஆகும்.
மிக நீண்ட தூரம் பயணம்:
சென்னைக்கும் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கும் இடையில் இயங்கப்படும் கரீப் ரத், 2075 கிமீ தூரம் பயணிக்கும் நாட்டின் மிக நீண்ட தூர கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் சென்னையிலிருந்து டெல்லி வரையிலான தூரத்தை 28 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயிலின் கட்டணம் 1500 ரூபாய்.
ராஜதானி எக்ஸ்பிரஸ் இந்த வழித்தடத்தில் 28 மணிநேரம் 25 நிமிடத்தில் பயணிக்கும். ராஜ்தானி எக்ஸ்பிரஸின் மூன்றாவது வகுப்பு ஏசியின் கட்டணம் ரூ.4210. அதாவது கரிப் ரத் ரயிலின் கட்டணத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
ஏசி பெட்டியில் பயணிக்க கி.மீ.க்கு 68 பைசா:
டெல்லியிலிருந்து சென்னைக்கு உள்ள தூரம் சுமார் 2180 கி.மீ. கரிப் ரத் ரயிலில் பயணம் செய்தால், டிக்கெட் கட்டணம் ரூ.1500 மட்டுமே. அதாவது, ஒரு கிலோமீட்டருக்கான கட்டணம் சுமார் 68 பைசா. உலகின் எந்த மூலைக்கும் இவ்வளவு குறைந்த செலவில் பயணம் செய்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ரயில்களில் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸை விட கரீப் ரத் ரயில் குறைவான வசதிகளைக் கொண்டுள்ளது. சாமானிய மக்களுக்கும் ஏசி பெட்டியில் பயணிக்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ரயில் தொடங்கப்பட்டது. எனவே, ஒப்பீட்டளவில் குறைந்தபட்ச வசதிகளே உள்ளன. இதனால் கட்டணமும் குறைவாக உள்ளது.