இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மாத சம்பளம் பெறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் சம்பளம் வழங்கி வருகின்றன. இதேபோல் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைவராகவும், நாட்டின் முதல் குடிமகனாகவும் உள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர குடியரசுத் தலைவருக்கு இலவச வீடு,
இலவச மருத்துவ சிகிச்சைகளும், வாகன வசதியும் உண்டு.
துணை குடியரசுத் தலைவர்
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு வாகன வசதி, வீடு, மருத்துவ வசதிகள் ஆகியவையும் உள்ளது.