திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சந்திர கிரகணத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 3ஆம் தேதி ஸ்ரீவாரி கோவில் பக்தர்களுக்காக தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு கோவில் கதவுகள் மூடப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
25
கிரகணத்தை முன்னிட்டு கோவில் மூடல்
கிரகணத்தை முன்னிட்டு கோவில் மூடுவது பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாகும். கிரகணம் தொடங்கும் நேரத்திற்கு சுமார் 6 மணி நேரத்திற்கு முன்பே ஆலய வாசல்கள் மூடப்படுவது வழக்கம். அதன்படி காலை முதலே தரிசன சேவைகள் மற்றும் சில சிறப்பு அர்ச்சனைகள் ரத்து செய்யப்படுகின்றன.
35
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்
கிரகணம் முடிந்ததும் மாலை 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்படும். பின்னர் ஆலய சுத்திகரிப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு இரவு 8.30 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் வர திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்கள் பயண ஏற்பாடுகளை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள சேவைகள் குறித்து தனிப்பட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
55
முக்கோடி உற்சவம்
மேலும், அதே நாளில் குமாரதார தீர்த்த முக்கொடி உற்சவம் நடைபெற உள்ளது. பங்குனி பவுர்ணமி நாளில் நடைபெறும் இந்த உற்சவத்தில் தீர்த்த ஸ்நானம் செய்வது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு நன்மை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.