'தி வயர்' செய்தி நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாக கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்குகள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கருத்து
அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாகக் கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் கிரிமினல் அவதூறு சட்டம் அரசியலைப்பின்படி செல்லுபடியாகும் தன்மை கொண்டவை என உறுதிசெய்தது. அப்போது, நற்பெயருக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமை என்றும், அது கண்ணியமான வாழ்க்கையின் பகுதி என்றும் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பு இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 499-ஐ உறுதி செய்தது. தற்போது, அந்த பிரிவு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 356 ஆக மாற்றப்பட்டுள்ளது.
25
‘தி வயர்’ கிரிமினல் அவதூறு வழக்கு
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் (JNU) சேர்ந்த பேராசிரியர் ஒருவர், 'தி வயர்' (The Wire) செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில், செய்தி நிறுவனத்திற்கும் அதன் செய்தியாளருக்கும் எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி 'தி வயர்' தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.
35
‘தி வயர்’ கட்டுரையில் குற்றச்சாட்டு
2016 ஆம் ஆண்டு 'தி வயர்' செய்தி நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், ஜேஎன்யு பேராசிரியர் "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் இருப்பிடம்" என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை தொகுத்ததாகக் குற்றம் சாட்டியது. அந்த ஆவணத்தில், ஜேஎன்யு "ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் மோசடி மையம்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், "இவை அனைத்தையும் கிரிமினல் குற்றங்களாகக் கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். 'தி வயர்' சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தின் கருத்துடன் உடன்படுவதாகத் தெரிவித்தார்.
55
சுப்ரமணியன் சுவாமி வழக்கு
இந்தியாவில், அவதூறு குற்றம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 356 இன் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி வழக்கில், உச்ச நீதிமன்றம் கிரிமினல் அவதூறு சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. அது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான கட்டுப்பாடாக செயல்படுவதாகவும் அப்போது நீதிமன்றம் கூறியிருந்தது.