Namelesss railway station In India
இந்திய ரயில் நிலையங்கள்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
நாடு முழுவதும் 7,301 ரயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரயில் நிலையங்கள் அனைத்திற்கும் பெயர்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டும் பெயர் இல்லாமல் இயங்கி வருகிறது. அது எப்படி ரயில் நிலையத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கும்? என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் பரபரப்பாக இயங்கி வருகிறது.
Indian Railway Stations
பெயர் இல்லாத ரயில் நிலையம்
அதாவது இந்த பெயர் இல்லாத ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பர்த்வான் நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையம் 2008ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதிருந்து இதற்கு பெயரிடப்படவில்லை. இது இன்னும் பெயர் இல்லாத ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
பெயர் இல்லாவிட்டாலும் இந்த ரயில் நிலையம் பிசியாகத் தான் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 6 ரயில்கள் நிற்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறது. இதேபோல் இந்த ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்தும் உள்ளது.
அம்மாடியோவ்! ரயில் சக்கரத்தின் எடை இவ்வளவா? 10 பேர் சேர்ந்தா கூட அசைக்க முடியாது போலயே!
Indian Railway
என்ன காரணம்?
இந்த ரயில் நிலையத்துக்கு பெயரிடப்படாததற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் பான்குரா - மசாகிராம் ரயில் பாதையில் ரெய்னாகர் மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 2008ம் ஆண்டு ரயில் நிலையம் கட்டப்பட்ட நேரத்தில் மேற்கண்ட இரு கிராமங்களின் மக்களும் இந்த நிலையத்திற்கு தங்கள் கிராமத்தின் பெயரை வைக்க பெரும் சண்டையிட்டனர். சில நாட்களுக்குப் பிறகு இந்த ரயில் நிலையத்திற்கு ரெய்னாகர் என்று பெயரிடப்பட்டது.
ஆனால் ராய்நகர் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே வாரியத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து இரு கிராம மக்களின் மோதல் வலுத்ததாலும், இந்த விஷயம் நீதிமன்றம் வரை சென்றதாலும் ரயில்வே அதிகாரிகள் இந்த ரயில் நிலையத்துக்கு ரெய்னாகர் மற்றும் ராய்நகர் என இரண்டு பெயரையும் வைக்காமல், வேறு எந்த பெயரும் வைக்காமல் அப்படியே பிளாங்க் ஆக விட்டு விட்டனர். இந்த ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பலகைகளில் எந்த பெயரும் இல்லாமல் வெறுமனவே இருக்கும்.
டிக்கெட் எப்படி வழங்குவார்கள்?
நீதிமன்ற அனுமதிக்குப் பிறகுதான் பெயர் மாற்றம் குறித்து ரயில்வே துறை யோசிக்கும் வாய்ப்பு உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் நிலையத்தின் பெயர் இல்லாததால் புதிய பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 6 ரயில்கள் இங்கு நின்றாலும் இது எந்த ஊர்? என தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
இங்கு இறங்கும் வெளியூர் பயணிகள் உள்ளூர் மக்களிடமிருந்து முழு விவரங்களையும் கேட்ட பிறகுதான் செல்ல முடிகிறது. பெயரே இல்லாத இந்த ரயில் நிலையத்துக்கு எப்படி டிக்கெட் கொடுப்பார்கள்? என நீங்கள் கேட்கலாம். இந்த நிலையத்திற்கான டிக்கெட்டுகள் பழைய பெயரில் அதாவது ராய்நகர் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. நீதிமன்றம் உத்தரவு வந்த பிறகுதான் இந்த ரயில் நிலையத்துக்கு அதிகாரப்பூர்வ பெயர் சூட்டப்படும்.
ரூ.3,337 கோடி வருவாய்! இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் இது தான்!