மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: பீர் விலை ரூ.45 உயர்வு; அரசு அதிரடி உத்தரவு!

Published : Jan 20, 2025, 05:25 PM ISTUpdated : Jan 20, 2025, 05:26 PM IST

பீர்களுக்கான கலால் வரியை அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் பீர்களின் விலை ரூ.45 வரை உயர்ந்துள்ளதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
14
மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: பீர் விலை ரூ.45 உயர்வு; அரசு அதிரடி உத்தரவு!
Beer Price Increased

மது விற்பனை அதிகரிப்பு 

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்கள் மது விற்பனையில் முன்னணியில் உள்ளன. அதுவும் தீபாவளி, ஓணம், பொங்கள் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில், கர்நாடக அரசு பீர் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது, இதன் காரணமாக பீர் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் பீர்கள் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

24
Beer Price in Karnataka

பீர் விலை உயர்வு 

புதிய கலால் விகிதங்களின் கீழ் 5% க்கும் குறைவான ஆல்கஹால் அளவு கொண்ட பீருக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வரி விதிக்கப்படும். 5% முதல் 8% ஆல்கஹால் அளவு கொண்ட பீருக்கு ஒரு லிட்டருக்கு ரூ.20 உயர்வு ஏற்படும். அதாவது கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பீர் பிராண்டுகளின் விலைகள் ரூ.10 முதல் ரூ.45 வரை அதிகரிக்கும்.

சாதாரண பீர்களுக்கு இந்த உயர்வு குறைந்தபட்சம் ரூ.10 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில பிரீமியம் பீர் பிராண்டுகளின் விலை ரூ.45 வரை உயரக்கூடும். பீர்களின் பிராண்ட்டுகள் மற்றும் ஆல்ஹகால் அளவை பொறுத்து விலை உயர்வு இருக்கும். 

நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற பெண்ணுக்கு தூக்குத் தண்டனை!

34
Karnataka Goverment

சில பிரபலமான பீர் பிராண்டுகளுக்கான விலை உயர்வு பட்டியல் 

லெஜண்ட் பீர்: பழைய விலை ரூ.100, புதிய விலை ரூ.145

பவர் கூல் பீர்: பழைய விலை ரூ.130, புதிய விலை ரூ.155

பிளாக் ஃபோர்ட் பீர்: பழைய விலை ரூ.145, புதிய விலை ரூ.160

ஹண்டர் பீர்: பழைய விலை ரூ.180, புதிய விலை ரூ.190

வூட் பெக்கர் க்ரெஸ்ட் பீர்: பழைய விலை ரூ.240, புதிய விலை ரூ.250

வூட் பெக்கர் கிளைடு பீர்: பழைய விலை ரூ.230, புதிய விலை ரூ.240

44
Beer Price Hike

விலை உயர்வு ஏன்?

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரியை 6 மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு உயர்த்திய நிலையில், இப்போது புதிதாக கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. நிதிச் சவால்களைச் சமாளிக்க மாநில அரசின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கலால் வரிகள், பல்வேறு துறைகளில் அதிகரித்த செலவினங்களை ஈடுசெய்யும் அதே வேளையில், மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கொள்ளையர்கள் புகுந்ததால் போலீசுக்கு போன் செய்த ஸ்பெயின் நபர்; கன்னடத்தில் பேசாததால் இணைப்பு துண்டிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories