ரயிலில் தட்கல் டிக்கெட் ஈசியாக எடுப்பது எப்படி? இந்த 4 வழிகளை பின்பற்றுங்க! முழு விவரம்!

Published : Jan 18, 2025, 06:19 PM IST

ரயிலில் தட்கல் டிக்கெட் ஈசியாக எடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
ரயிலில் தட்கல் டிக்கெட் ஈசியாக எடுப்பது எப்படி? இந்த 4 வழிகளை பின்பற்றுங்க! முழு விவரம்!
Train Tatkal Ticket

தட்கல் டிக்கெட்

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலனவர்களால் விரைவாக கன்பார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இவர்களுக்கு உதவும் வகையில் தட்கல் டிக்கெட் ஈசியாக எடுப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.

24
How To Get Tatkal Ticket

முன்கூட்டியே முதன்மை பட்டியல்

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​பெயர், வயது, பாலினம் போன்ற தகவல்களை நிரப்ப சிறிது நேரம் ஆகும். நீங்கள் இந்த நேரத்தில் இவற்றை டைப் செய்து கொண்டிருந்தால் டைப்ப் செய்து முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் தீர்ந்து விடும். ஆகவே டிக்கெட்டுகளை விரைவாக எடுக்க ஐஆர்சிடிசியில் முதன்மைப் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்யவும். 

IRCTC இணையதளத்தில் உள்ள 'எனது சுயவிவரம்' My profileபகுதிக்குச் சென்று முன்கூட்டியே பட்டியலைத் தயாரிக்கலாம். இந்தப் பட்டியலில் 20 பயணிகளின் தகவல்களைச் சேர்க்கலாம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். இதன்மூலம் தட்கல் முன்பதிவு திறக்கப்பட்ட உடன் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

காஷ்மீர் மக்கள் இப்போது என்ன விரும்புகிறார்கள்? ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
 

34
How to easily buy a Tatkal ticket?

OTP இல்லாமல் பணம் செலுத்துதல்

நீங்கள் IRCTC இணையதளத்தில் ஆன்லைன் அல்லது கார்டு மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இணைய வங்கி மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது OTP சரிபார்ப்பு அவசியம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உங்கள் ஓடிபிஐ பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திற்குள் டிக்கெட் தீர்ந்து விடலாம். ஆகவே இந்த நேரத்தைச் சேமிக்க, OTP இல்லாத கட்டண முறையைப் பின்பற்றவும். ரயில்வே இ-வாலட், Paytm மற்றும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
 

44
Train Reservation Ticket

இன்டர்நெட் முக்கியம்

இன்டர்நெட் வேகம் சரியில்லை என்றால், இணையதளத்தை ஒப்பன் செய்வதில் சிரமம் ஏற்படும்.  தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இணையம் மெதுவாக இருந்தால் நீங்கள் கன்பார்ம் டிக்கெட்டுகளை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆகவே தட்கல் டிக்கெட் புக் செய்யும் முன்பே உங்கள் செல்போன் அல்லது லேப்டாப்பின் இணைய வேகம் சரியாக இருக்கிறதா? என செக் செய்து கொள்ளுங்கள்.

 டிமாண்ட் அதிகம் இல்லாத ரயில்கள்

தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது எப்போதும் அதிக டிமாண்ட் இருக்கும் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது கடினம். ஆகவே நீங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் அதிகம் டிமாண்ட் இல்லாத ரயில்களில் தட்கல் புக் செய்தால் கன்பார்ம் ஆக அதிக வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.? காலனி ஆதிக்கம் தான் காரணமா?

Read more Photos on
click me!

Recommended Stories