உ.பி. கும்பமேளாவை விடுங்க; கர்நாடகாவில் 3 நாள் மகா கும்பமேளா நடக்குது தெரியுமா? முழு விவரம்!

Published : Feb 10, 2025, 10:37 AM IST

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்திலும் 3 நாள் பிரம்மாண்டமாக மகா கும்பமேளா நடைபெறுகிறது.

PREV
14
உ.பி. கும்பமேளாவை விடுங்க; கர்நாடகாவில் 3 நாள் மகா கும்பமேளா நடக்குது தெரியுமா? முழு விவரம்!
உ.பி. கும்பமேளாவை விடுங்க; கர்நாடகாவில் 3 நாள் மகா கும்பமேளா நடக்குது தெரியுமா? முழு விவரம்!

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா திருவிழா பிப்ரவரி 26ம் தேதி வரை அதாவது 45 நாள்களுக்கு நடைபெறுகிறது. மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

கங்கா, யமுனை, சரஸ்வதி நதிகள் இணைவதாக கூறப்படும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஒரே இடத்தில் கோடிக்கணக்கான மக்கள் கூடும் உலகத்தின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக பிரயாக்ராஜ் மகா கும்பமேளா அமைந்துள்ளது. சாமானியன் முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும்  பிரயாக்ராஜ் நகரில் திரண்டு வருகின்றனர்.

24
மகா கும்பமேளா திருவிழா

உத்தரபிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் மற்றொரு மாநிலத்திலும் கும்பமேளா திருவிழா நடப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி. நரசிபுரா என்ற நகரத்தில் மூன்று நாள் வெகு விமரிசையாக மகா கும்பமேளா திருவிழா கொண்டாடபப்டுகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுய்ம் கர்நாடகாவின் இந்த கும்பமேளா, காவிரி, கபிலா மற்றும் ஸ்படிகா ஆறுகள் பாயும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது.

அதாவது பிப்ரவரி 10ம் தேதி (இன்று) முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் டி. நரசிபுராவில் மகா கும்பமேளா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா கும்பமேளா திருவிழாவின் முதல் நாளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் பல்வேறு மத விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மகா கும்பமேளா 2025ல் மனைவியுடன் புனித நீராடிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

34
கர்நாடகவில் மகா கும்பமேளா

இது தொடர்பாக கும்பமேளாவின் நோடல் அதிகாரி ராகேஷ் கூறுகையில், ''பிப்ரவரி 10ம் தேதி மத சடங்குகள் மற்றும் விழாக்களுடன் கும்ப‌மேளா தொடங்கும். பிப்ரவரி 11ம் தேதி, மாநிலம் முழுவதிலுமிருந்து முக்கிய மதத் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெறும்'' என்றார்.

கும்பமேளாவையொட்டி பக்தர்களுக்காக 15க்கும் மேற்பட்ட படகுகள் கொன்டு வரப்பட உள்ளன. ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திலிருந்து இரண்டு படகுகளும், உள்ளூர் பகுதிகளிலிருந்து 12 படகுகளும், அருகிலுள்ள ரிசார்ட்டுகளிலிருந்து நான்கு படகுகளும் வர உள்ளன. மக்கள் ஆற்றில் மூழ்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க நீச்சல் வீரர்கள் அங்கு நிறுத்தப்படுவார்கள்.

44
கும்பமேளா திருவிழா

தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. மூன்று குளியல் தொட்டிகள் அமைக்கபப்ட்டு, 20 தற்காலிக உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் பத்து கழிப்பறைகளைக் கொண்டுள்ளன. தனி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பழைய திருமகூடலுவை குஞ்சா நரசிம்ம சுவாமி கோயிலுடன் இணைக்க ஆற்றின் குறுக்கே ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, மைசூருவில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகின்றன.

Marriage Grant Scheme : ரூ. 20,000 நிதியுதவி – மகளிருக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!

Read more Photos on
click me!

Recommended Stories