மணமகனின் சிபில் ஸ்கோர் கம்மியாக இருந்ததால் நின்றுபோன திருமணம்!

Published : Feb 09, 2025, 12:16 AM IST

மணப்பெண்ணின் மாமா, திருமணத்துக்கு முன்பு மணமகனின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) எவ்வளவு என்று பார்க்க வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார். ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணமே நிறுத்தப்பட்டுவிட்டது.

PREV
16
மணமகனின் சிபில் ஸ்கோர் கம்மியாக இருந்ததால் நின்றுபோன திருமணம்!
CIBIL score tragedy

திருமணத்திற்காக ​​பல காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக பெற்றோர் சம்மதத்துடன் நடத்திவைக்கப்படும் திருமணங்களில் பல பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில், திருமணம் முடிவாகிறது அல்லது முறிந்து போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரின் திருமண விஷயத்தில், அவரது சிபில் ஸ்கோர் (CIBIL Score) வில்லனாக மாறிவிட்டது.

26
Marriage calls off for poor CIBIL score

மணமகளின் மாமா ஒருவர் மணமகனின் CIBIL ஸ்கோர் என்ன என்று பார்க்க விரும்பியுள்ளார். திருமணத்தை இறுதி செய்வதற்கு சற்று முன்பு சிபில் ஸ்கோரைப் பார்க்க வற்புறுத்தியுள்ளனர். இதனால், நடக்க இருந்த கல்யாணமே நின்றுபோனது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் முர்திசாபூரில் நடந்தது.

36
CIBIL score demerits

இரு தரப்பினரும் திருமண பந்தத்தில் இணைய உடன்பட்டனர். மற்ற விவரங்களைப் பற்றி விவாதிக்க விரும்பினர். அந்த நேரத்தில் பெண்ணின் மாமா மணமகனின் CIBIL ஸ்கோரைக் பார்க்க வேண்டும் என்று கேட்டதும் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது.

46
How poor CIBIL score stopped marriage?

மாமா பார்த்ததில் மணமகனின் சிபில் ஸ்கோரைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். மணமகனின் பெயரில் வெவ்வேறு வங்கிகளில் பல கடன்கள் இருந்ததைக் கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞரின் CIBIL ஸ்கோரும் குறைவாக இருந்திருக்கிறது. குறைந்த CIBIL ஸ்கோர் மோசமான கடன் வரலாற்றைக் குறிக்கிறது. பொதுவாக இது நிதி சார்ந்த உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது.

56
Marriage canceled for bed CIBIL score?

இந்த கட்டத்தில், மணமகளின் மாமா திருமணத்திற்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவர், தனது வருங்கால மனைவிக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க முடியாது. எனவே தனது மருமகளுக்குப் பொருத்தமான ஜோடியாக இருக்க மாட்டார் என்று அவர் வாதிட்டார். பெண் வீட்டார் அனைவரும் அதையே கூறி, திருமண சம்பந்தத்தை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டனர்.

66
What is CIBIL score?

CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண்ணாகும். இது 300 முதல் 900 வரை இருக்கும். அதிகமாக இருந்தால் நல்ல நிதி நிர்வாகத்தைக் குறிக்கும். அதே வேளையில், குறைந்த ஸ்கோர் இருந்தால் மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதைக் குறிக்கும். ஒரு நபரின் கடன் தகுதியை தீர்மானிக்க வங்கி அதிகாரிகள் சிபில் (CIBIL) ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதை முக்கியக் காரணியாக பயன்படுத்துகின்றனர். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் சிபில் ஸ்கோர் குறைகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories