ஊழல் குற்றச்சாட்டுகளில் ராஜினாமா:
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2024 இல் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். "நான் அக்னி பரிட்சைக்குத் தயாராக இருக்கிறேன்" என்று கூறி ராஜினாமா செய்த அவர், மக்கள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை நான் முதல்வர் பதவி நாற்காலியில் அமர மாட்டேன் என்று கூறியிருந்தார்.
சிறையில் இருந்தபோதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால், வழக்கு விசாரணையின் நெருக்கடிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியில் தனது பதவியைக் கைவிட்டார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், கேஜ்ரிவால் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.