ஆந்திராவின் எலமஞ்சில்லி அருகே டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 158 பயணிகள் உயிர் தப்பினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திரா மாநிலம் எலமஞ்சில்லி ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு ஏசி பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. பி1, எம்2 பெட்டிகள் தீயில் எரிந்தன.
23
இரண்டு ஏசி பெட்டிகளில் தீ விபத்து
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 158 பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக உடைமைகளை கூட எடுக்காமல் ரயிலில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். தீ விபத்து குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தீயை அணைத்து ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் உயிரோடு எரிந்து சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவரின் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
33
தீ விபத்து குறித்து விரிவான விசாரணை
தீப்பிடித்த இரண்டு பெட்டிகளும் உடனடியாக ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.