பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!

Published : Dec 28, 2025, 09:15 PM IST

'இன்குலாப் மஞ்ச்' தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையாளிகள் மேகாலயா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக வங்கதேச காவல்துறை கூறியது. இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது என பி.எஸ்.எஃப் மற்றும் மேகாலயா காவல்துறை மறுத்துள்ளன.

PREV
14
வங்கதேசத்துக்கு பதிலடி

வங்கதேசத்தின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளிகள் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக வங்கதேச காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்தத் தகவலை ஆதாரமற்றது என்று கூறி பி.எஸ்.எஃப் மற்றும் மேகாலயா காவல்துறை நிராகரித்துள்ளது.

24
பி.எஸ்.எஃப் மறுப்பு

மேகாலயா பி.எஸ்.எஃப் ஐ.ஜி (Inspector General) ஓ.பி. உபாத்யாய் இது குறித்து கூறுகையில், "வங்கதேச காவல்துறை கூறுவது முற்றிலும் தவறானது; திசைதிருப்பும் செயல். ஹாலுவாகாட் (Haluaghat) செக்டார் வழியாக எந்த ஒரு நபரும் சர்வதேச எல்லையைக் கடந்து மேகாலயாவுக்குள் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. பி.எஸ்.எஃப் இது போன்ற ஒரு சம்பவத்தைக் கண்டறியவும் இல்லை, எங்களுக்கு இது பற்றி எந்தத் தகவலும் வரவில்லை." என்றார்.

மேகாலயா மாநில காவல்துறையும் இந்தத் தகவலை மறுத்துள்ளது. கரோ ஹில்ஸ் (Garo Hills) பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்து எந்த உளவுத்துறை தகவலும் (Intelligence Input) இல்லை என்று அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

34
டாக்கா போலீஸ் புகார்

முன்னதாக இன்று காலை, டாக்கா மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உஸ்மான் ஹாடி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பைசல் கரீம் மசூத் மற்றும் ஆலம் கிர் ஷேக் ஆகியோர் மேகாலயாவின் கரோ ஹில்ஸ் பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களுக்கு உள்ளூர்வாசிகள் சிலர் உதவியுள்ளனர்," என்று குறிப்பிட்டிருந்தார்.

44
யார் இந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி?

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் (July Uprising) போது முன்னிலை வகித்தவர். கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி டாக்காவில் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 18-ஆம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் வங்கதேசம் முழுவதும் பெரும் வன்முறையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணமானவர்கள் இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாக வங்கதேசத்தில் ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், இந்தியப் படைகள் அதை மறுத்துள்ளன.

தற்போது வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச எல்லையில் பி.எஸ்.எஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சட்டவிரோத ஊடுருவல் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பி.எஸ்.எஃப் உறுதியளித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories