வானில் ஜொலிக்கும் சூப்பர் மூன்! பெரிய நிலாவை மிஸ் பண்ணாம பாருங்க!

Published : Oct 06, 2025, 06:04 PM IST

2025-ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு, 'ஹார்வெஸ்ட் மூன்' என்ற பெயரில் அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் வானில் தென்பட உள்ளது. பூமிக்கு மிக அருகில் வருவதால், இந்த முழு நிலவு வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும்.

PREV
15
அரிய வானியல் நிகழ்வு

வானியல் ஆர்வலர்களை பிரமிக்க வைக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று (அக்டோபர் 6) இரவும், நாளை (அக்டோபர் 7) அதிகாலையிலும் வானில் தென்பட உள்ளது. அறுவடை காலத்தின் முழு நிலவு என்பதால், இது 'ஹார்வெஸ்ட் மூன்' (Harvest Moon) என்றும் அழைக்கப்படுகிறது.

25
சூப்பர் மூன் என்றால் என்ன?

வானியல் ரீதியாக, ஒரு முழு நிலவு, பூமியைச் சுற்றி சந்திரன் நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்போது, பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளியான 'பெரிஜி' (Perigee) உடன் ஒரே நேரத்தில் அமையும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

இதனால், சந்திரன் வழக்கமான பௌர்ணமி நிலவை விட சுமார் 30% அதிகப் பிரகாசத்துடனும், 14% பெரியதாகவும் தோன்றும்.

35
சூப்பர் மூன்: நிலவின் மாயத்தோற்றம்

இந்த அளவு வேறுபாடு வெறும் கண்களுக்கு அவ்வளவு நுட்பமாகத் தெரியாவிட்டாலும், அடிவானத்திற்கு அருகில் சந்திரன் இருக்கும்போது, "நிலவு மாயை" (Moon Illusion) காரணமாக அது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.

சூப்பர் மூனின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், பூமியில் கடலில் அலைகள் சற்று அதிக உயரத்திற்கு எழ வாய்ப்புள்ளது.

45
சூப்பர் மூன் பார்க்க சிறந்த நேரம் எது?

இந்த கண்கவர் வானியல் நிகழ்வைக் காண சிறந்த நேரம், இன்று அக்டோபர் 6-ஆம் தேதி, சூரியன் மறைந்த உடனேயே ஆகும். கிழக்கு அடிவானத்தில், நகரின் வெளிச்சங்கள் இல்லாத இடத்திலிருந்து பார்ப்பதன் மூலம், ஒளியின் மாசுபாடு குறைந்து, தெளிவான பிரகாசமான காட்சியை ரசிக்க முடியும்.

55
சூப்பர் மூன் எப்போது தெரியும்?

இந்த 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று அக்டோபர் 6 மாலை முதல் அக்டோபர் 7 அதிகாலை வரை இந்தியாவில் தெரியும். வானிலைத் தெளிவு மற்றும் மேகமூட்டத்தைப் பொறுத்து, இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இந்த நிகழ்வைக் காண வாய்ப்புள்ளது.

முழு நிலவு இன்று இரவு வானில் பெரிதாகவும், பிரகாசமான பொன் நிறத்திலும் ஜொலிப்பதைக் காண முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories