பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கிய இலங்கை அரசு!

Published : Apr 05, 2025, 02:21 PM ISTUpdated : Apr 05, 2025, 03:28 PM IST

PM Modi Honoured with Sri Lanka Mithra Vibhushana Award: இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கத்தை வழங்கியுள்ளது. இருநாட்டு உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பதக்கத்தை வழங்குகிறது.

PREV
14
பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கிய இலங்கை அரசு!
PM Modi Honoured with Sri Lanka Mithra Vibhushana Award

மோடி இலங்கை பயணம்:

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சனிக்கிழமை காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் ஒரு பகுதியாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

24
PM Modi Honoured by Sri Lankan President

மித்ர விபூஷண பதக்கம்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசு நாட்டின் மிக உயர்ந்த விருதான 'மித்ர விபூஷண' பதக்கம் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

UPI கிரெடிட் கார்டு என்றால் என்ன? பிம்ஸ்டெக் நாடுகளில் மோடி வைத்த கோரிக்கை!

34
Sri Lankan President Anura Kumara Dissanayaka and PM Modi

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க:

விருதை வழங்கிப் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, "இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் மட்டுமின்றி, வரலாறு, மதம் மற்றும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. நமது இருதரப்பு உறவுகள் காலங்கள் கடந்து நிற்கின்றன. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது" என்று கூறினார்.

44
PM Modi welcomed in Colombo

140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை:

இலங்கையின் மிக உயரிய விருதான 'மித்ர விபூஷண' விருதைப் பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்தார். இது தனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கும் மரியாதை என்று கூறினார். "இந்த விருது எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்த மரியாதை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவு மற்றும் ஆழமான நட்பின் அடையாளமாகும். இந்த பாசம் மற்றும் மரியாதைக்காக இலங்கை அதிபர் அனுர குமார் திசாநாயக்க, இலங்கை அரசு மற்றும் இங்குள்ள மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

PPF கணக்கில் நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!

Read more Photos on
click me!

Recommended Stories