ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக மாலை 4:35 மணிக்கு (இந்திய நேரம்) துண்டிக்கப்படுவார்கள். பிறகு, சுமார் 22.5 மணிநேரம் கழித்து, அதாவது செவ்வாய்க்கிழமை மாலை 3:01 மணிக்கு (இந்திய நேரம்), கலிஃபோர்னியா கடற்கரை அருகே விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டிராகன் விண்கலம் 580 பவுண்டுகளுக்கும் அதிகமான பொருட்களை சுமந்து வரும் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதில் நாசாவின் உபகரணங்கள் மற்றும் திட்டத்தின்போது நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட சோதனைகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தரவுகளும் அடங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.