Shirdi Temple: சாய்பாபா தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களே கவனிக்கவும்.. ஜூலையிலிருந்து புதிய கட்டணம் அமல்!

Published : Jul 15, 2026, 02:02 PM IST

Shirdi Temple: மகாராஷ்டிராவின் உலகப் புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுதொடர்பான விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
ஷீரடி சாய்பாபா கோவில்

ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை, விஐபி Protocol தரிசன வசதிக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதிய அறிவிப்பின்படி, விஐபி தரிசன பாஸ் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கட்டணம் ரூ.200 ஆக இருந்தது.

25
ஏன் இந்த மாற்றம்?

அறக்கட்டளையின் விளக்கத்தின்படி, இதுவரை விஐபி Protocol Darshan மற்றும் Regular Paid Darshan ஆகிய இரண்டிற்கும் ஒரே கட்டணம் இருந்ததால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்தவும், விஐபி வசதியின் தனித்துவத்தை பராமரிக்கவும் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு காதல் கைகூடுவது கஷ்டம்.. உங்கள் பிறந்த தேதி இருக்கா?

35
சாதாரண தரிசன கட்டணத்தில் மாற்றமில்லை

பொதுமக்களுக்கு முக்கிய நிம்மதியான தகவல் என்னவென்றால், வழக்கமான கட்டண தரிசன கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆன்லைன் அல்லது கவுண்டரில் பெறப்படும் வழக்கமான கட்டண தரிசன பாஸ் ரூ.200 என்ற பழைய கட்டணத்திலேயே தொடர்கிறது.

45
பக்தர்களுக்கு என்ன பலன்?

அறக்கட்டளையின் கூற்றுப்படி, விஐபி தரிசன கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் விஐபி வரிசையில் தேவையற்ற கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் இலவசம் மற்றும் சாதாரண தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், கூடுதலாக வருவாய் கிடைக்கும் பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானம் மற்றும் இலவச மருத்துவ சேவைகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
எப்போது அமலுக்கு வந்தது?

இந்த புதிய கட்டணம் ஜூலை முதல் வாரம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஷீரடிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள், விஐபி தரிசன பாஸ் முன்பதிவு செய்வதற்கு முன் தற்போதைய கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories