7 உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

Published : Apr 21, 2025, 12:59 PM ISTUpdated : Apr 21, 2025, 01:05 PM IST

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் இடமாற்றம் செய்துள்ளது. பன்முகத்தன்மை மற்றும் நீதி நிர்வாகத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
7 உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
Supreme Court of India

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை:

கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் உட்பட ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் நீதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இந்த பணியிட மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

24
Collegium recommendation

கொலீஜியம் கூட்டத்தில் முடிவு:

இந்தப் பணியிட மாற்றம் தொடர்பாக இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. “உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏப்ரல் 15, 2025 மற்றும் ஏப்ரல் 19, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில்… உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

34
Madras high court

கர்நாடகா, சென்னை, குஜராத், ஒடிசா:

கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து, நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி கிருஷ்ணன் நடராஜனை கேரளாவிற்கும், நீதிபதி நேரனஹள்ளி ஸ்ரீனிவாசன் சஞ்சய் கவுடாவை குஜராத்துக்கும், நீதிபதி தீட்சித் கிருஷ்ணா ஸ்ரீபாத்தை ஒரிசா உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

44
Transfer of 7 high court judges

கர்நாடகா, தெலுங்கானா, சென்னை, ஆந்திரா:

நீதிபதி பெருகு ஸ்ரீ சுதாவை தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடகாவிற்கும், தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி கே. சுரேந்தர் என்ற கசோஜு சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி கும்பஜதல மன்மத ராவை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடகாவிற்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories