“சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு பதிவு, 'பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025' என்ற புதிய திட்டத்தின் கீழ், அரசாங்கம் இலவச 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்களை வழங்கும் என்றும் 1.5 கோடி ஏசிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது,” என்று PIB Fact Check வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது. “இந்தக் கூற்று #FAKE” என்றும் கூறியுள்ள அப்பதிவு, “இலவச 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்களை வழங்கும் திட்டம் எதுவும் மின்சார அமைச்சகத்தால் ஆல் அறிவிக்கப்படவில்லை” என்றும் தெளிவுபடுத்துகிறது.