டிரம்ப் தடாலடியால் விமானக் கட்டணம் சரிவு! ரூ.37,000 ல் அமெரிக்கா போகலாம்!

Published : Apr 21, 2025, 09:48 AM ISTUpdated : Apr 21, 2025, 10:23 AM IST

இந்த கோடையில் அமெரிக்காவிற்கான விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன. மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு ஒருவழிப் பயண டிக்கெட் ரூ.37,000க்கு கிடைக்கிறது. டிரம்ப்பின் கொள்கைகள் விமானப் பயணத்தை மலிவாக்கியதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

PREV
15
டிரம்ப் தடாலடியால் விமானக் கட்டணம் சரிவு! ரூ.37,000 ல் அமெரிக்கா போகலாம்!
Trump Tariffs

டிரம்ப் அதிரடி:

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோடை காலத்தில் அமெரிக்காவிற்கான விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்திருக்கும் அதிரடியான கொள்கை முடிவுகளின் விளைவாக விமானப் பயணம் மலிவாகி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

25
US Flight Tickets

விமானக் கட்டணம் குறைவு:

மும்பையிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கான கட்டணம் மிகவும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் செல்வதற்கான ஒருவழிப்பயண டிக்கெட்டின் விலை ரூ.37,000 மட்டுமே! மே மாதத்தின் நடுப்பகுதியில் பயணிப்பதற்கு இப்போது இந்த மலிவு விலை டிக்கெட்டில் புக் செய்யலாம்.

35
Cheaper Flight Ticket

மலிவ விலை டிக்கெட்:

திரும்பும் டிக்கெட்டுகளில் மலிவானது ரூ.76,000 க்குக் கிடைக்கிறது. இருந்தாலும், இது மத்திய கிழக்கு விமான நிலையத்தில் நீண்ட நேர நிறுத்தத்தையும் உள்ளடக்கியது. டெல்லி அல்லது லண்டன் வழியாகச் செல்லும் விமானத்தில் ரூ.85,000க்கு டிக்கெட் கிடைக்கும்,. இதில், நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்காது.

45
US Flights

இந்தியா-அமெரிக்கா விமானப் பயணம்:

இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்த சமூகமாக உள்ளனர். அமெரிக்காவில் பணிபுரியும் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்பவர்கள், அமெரிக்காவில் இருந்து குடும்பத்திரைப் பார்க்க இந்தியாவுக்கு வருபவர்கள் அதிகமாக இருப்பதாக எப்போதும் விமானப் பயணத்திற்குத் தேவை உள்ளது.

55
India US Airline

இந்திய மாணவர்கள்:

அமெரிக்காவிற்கு வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள்தான் அதிகம். இதனால் அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து ஆண்டு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories