விழிப்புணர்வு இல்லேன்னா எல்லாமே வேஸ்ட்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

Published : Jul 27, 2025, 07:36 PM IST

இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார்.

PREV
14
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

விழிப்புணர்வு இல்லாவிட்டால் உரிமைகள் இருந்தும் பயனில்லை என இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுளாளர். மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA - நல்சா) வட மண்டல மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி கவாய், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து, அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

24
உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்

"நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த திசையில்தான் நல்சா செயல்படுகிறது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளான லடாக், வடகிழக்கு அல்லது ராஜஸ்தான் என எங்கிருந்தாலும் நல்சாவின் பணிகளை கொண்டு செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பற்றிய அறிவு அவசியம் என்றும் அது இல்லாவிட்டால், உரிமைகள் இருந்தாலும் எந்த பயனும் இல்லை என்றும் தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.

34
தவறுகளை சரிசெய்ய உழைக்க வேண்டும்

கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "தவறுகள் நிகழ்ந்துள்ளன, ஆனால் இவற்றை நீக்க நாம் உழைக்க வேண்டும்.” என்றார்.

“இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்ந்த பாரம்பரியம் கொண்ட காஷ்மீரை மீண்டும் கட்டியெழுப்ப இந்த நிகழ்ச்சி உதவும் என்று நான் நம்புகிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

44
அம்பேத்கர் நிலைநாட்டிய நீதி

டாக்டர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் 'ஒரு நபர், ஒரு வாக்கு' மூலம் அரசியல் நீதியைக் கொண்டுவந்தார் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். சமூகப் பிரிவினைகள் பற்றியும் அவற்றை சரிசெய்வதில் உள்ள சிரமங்கள் குறித்தும் அவர் பேசினார் என்பதையும் தலைமை நீதிமதி நினைவுகூர்ந்தார்.

லடாக், காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளின் வழக்கறிஞர் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி கவாய், அவற்றை நேரடியாகத் தீர்க்க தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், கொலீஜியம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிப்பேன் என்று உறுதியளித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories