கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30தேதி இடைவிடாது பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேடுப்பட்டி, சூரல்மலை ஆகிய கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பேரிடரின் நிலைமைய அறிந்த பிரதமர் மோடி அரசு, நிலைமையை உடனடியாக ஆய்வு செய்து சம்பவ இடத்திலை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள NDRF, ராணுவம், விமானப்படை, கடற்படை, தீயணைப்பு சேவைகள் போன்றவற்றின் 1200க்கும் மேற்பட்ட மீட்பு படைக்குழுவினரை கேரளாவுக்கு அனுப்பியது.