wayanad ladslide
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் பல இடங்களிலும் பல நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தததால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
Kerala Flood
நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் வீடு, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 பேரில் நிலை என்னவென்பதே தெரியவில்லை. வயாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
Kerla flood
கேரள வெள்ளம் குறித்து ஏற்கனவே தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியாவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இந்த ஆண்டு மின் கட்டணம் உயரும், மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil panchangam predictions about flood
மேலும் “ பம்பாய், ஒரிசா, காசி, கயா, உத்தப்பிரதேசம், மத்திய பிரதேசம் தெலங்கானா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாக மாறும்” என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் இந்த கணிப்புகள் உண்மையாக மாறி உள்ளது.
flood
தமிழ் பஞ்சாங்கத்தின் படி “ 2024-ம் ஆண்டு 16 புயல் உருவாகும், அதில் 9 புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கடுமையான கனமழை பெய்யும். குற்றாலம், மூணாறு, வால்பாறை ஆகிய நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் அதிகமாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.