மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு? எப்படி கணக்கிட வேண்டும் தெரியுமா?

First Published | Aug 8, 2024, 6:33 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். அகவிலைப்படி உயர்வு, மொத்த சம்பளத்தை கணக்கிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

Dearness Allowance

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அகவிலைப்படி எவ்வளவு? அதை எப்படிக் கணக்கிட வேண்டும் என்று பார்ப்போம்.

Dearness Allowance Hike

மத்திய அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை ஆண்டுதோறும் இரண்டு முறை மாற்றி அமைக்கிறது. இது குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிவரும். அகவிலைப்படி உயர்வுடன் அரியர் தொகையும் வழங்கப்படும். மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு கிடைத்தால் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கிடலாம்.

Latest Videos


What is Dearness Allowance?

கடந்த முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% உயர்த்தப்பட்டது. ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் 4% அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

DA Hike

ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரித்தால், மாதம் ரூ.720 கூடுதலாகக் கிடைக்கும். ரூ.20,000 அடிப்படைச் சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.800, ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.1,000 கூடுதலாகக் கிடைக்கும்.

DA calculator

அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால் மாதம் ரூ.1,200, ரூ.40,000 என்றால் ரூ.1,600, ரூ.50,000 என்றால் ரூ.2,000 அதிகமாக வருமானம் கிடைக்கும். ரூ.60,000 அடிப்படை ஊதியத்துக்கு ரூ.2,400, ரூ.70,000 அடிப்படை ஊதியத்துக்கு ரூ.2,800 கிடைக்கும். இதேபோல ரூ.80,000 க்கு ரூ.3,200, ரூ.90,000 க்கு ரூ.3,600, ரூ.1,00,000 க்கு ரூ.4,000 மாதம்தோறும் கூடுதலாகக் கிடைக்கும்.

How to calculate DA hike?

ரூ.1,25,000 மாதச் சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.5,000 கிடைக்கும். ரூ.1,50,000 சம்பளம் பெற்றுவந்தால் ரூ.6,000 அதிகமாகப் பெறலாம். ரூ.1,75,000 சம்பளத்துக்கு ரூ.7,000, ரூ.2,00,000 சம்பளத்துக்கு ரூ.8,000, ரூ.2,25,000 சம்பளத்துக்கு ரூ.9,000 அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.2,50,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் ரூ.10,000 பெறுவார்கள்.

click me!