அடுக்கடுக்காக குவிந்த புகார்கள்: ஓலாவுக்கு செக் வைத்த அரசு!!

First Published | Oct 14, 2024, 11:33 AM IST

பயணிகளுக்கு கட்டாயம் ரசீது அல்லது இன்வாய்ஸ் வழங்க வேண்டும் என்று ஓலா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Ola Cars

ஆப் மூலமாக போக்குவரத்து வசதியை செய்து கொடுக்கும் ஓலா நிறுவனம் நாட்டின் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே ஓலா நிறுவனத்தின் மீது குவிந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மீது மத்திய நுகர்வோர் ஆணையம் சற்று கவனம் செலுத்தி உள்ளது. அதன்படி ஓலா நிறுவனத்திற்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Ola Cars

ஓலாவில் பயணிக்கும் நுகர்வோர் தங்கள் பணத்தை திரும்பப் பெறும் பொழுது நேரடியாக தங்கள் வங்கி கணக்கில் அல்லது கூப்பன் வழியை தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு வழிமுறையை செயல்படுத்த வேண்டும். மேலும் கூடுதலாக ஓலா செயலி அல்லது அதன் இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து சவாரிகளின் போதும் நுகர்வோருக்கு ரசீது வழங்க வேண்டும்.

Tap to resize

Ola Cars

வாகன சேவையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பை உறுதி செய்ய வேண்டும். ஓலாவில் முன்பதிவு ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணப் பட்டியலை பயணிகளுக்கு வழங்க மறுப்பது முற்றிலும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். தேசிய நுகர்வோர் உதவி எண்ணுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை ஓலா மீது மொத்தமாக 2,061 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன.

Ola Cars

பயணிகளிடம் முன்பதிவு கட்டணத்தைக் காட்டிலும் அதிகக் கட்டணம் வசூலிப்பது, பயணிகளுக்கு தொகையை திருப்பித் தராதது, ஓட்டுநர் சரியான இடத்தை அடையாதது, குறிப்பிட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் இறக்கிவிடுவது உள்ளிட்ட முக்கிய புகார்கள் கவனம் ஈர்த்துள்ளன.

பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்ட கட்டமைப்பை ஓலா நிறுவனம் கடைபிடிப்பதை உறுதி செய்வதில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதியாக உள்ளது என்று நுகர்வோர் அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!