வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிதி நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பள்ளிகள் மறுசீரமைப்பு, விவசாயிகளுக்கு கூடுதல் உதவி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும், மக்களையும் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர பன்முக கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
23
ரூ.1,500 கோடி வெள்ள நிவாரண நிதி
பிரதமர் அறிவித்துள்ள நிதியுதவியானது வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பள்ளிகளை மறுசீரமைத்தல், விவசாயிகளுக்கு கூடுதல் உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
33
பஞ்சாப் செல்லும் மோடி
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுக்கள் அளிக்ககும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் மேலும் உதவிகள் செய்வது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்திற்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்திற்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கும் இதே போன்ற நிவாரண உதவி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது