மோடியின் அமெரிக்கப் பயணம்:
பிப்ரவரி மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதிபர் டொனால்ட் டிரம்புடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு அந்நாட்டுச் சென்ற மோடி எலான் மஸ்க்கையும் சந்தித்தார். அப்போது விண்வெளி, தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து எலான் மஸ்க்குடன் விவாதித்தார்.
"புதுமையான கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும் எலான் மஸ்க்கும் விவாதித்தனர்" என்று வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது.