வெறுங்காலுடன் சென்ற மக்கள்! ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்!

Published : Apr 19, 2025, 07:56 AM IST

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரு கிராமத்துக்கே காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
வெறுங்காலுடன் சென்ற மக்கள்! ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்!

Pawan Kalyan Gifted shoes to a Entire village: ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள பெடபடு கிராம மக்களுக்கு காலணிகளை அனுப்பி உதவியுள்ளார். அரக்கு மற்றும் டம்பிரிகுடா பகுதிகளுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ​​பெடபடு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்தார்.

24
Andhra Pradesh Deputy CM Pawan Kalyan

அந்த கிராமத்தைப் பார்வையிட்டபோது, ​​பாங்கி மிது என்ற மூதாட்டி உட்பட பல கிராம மக்கள் வெறுங்காலுடன் இருப்பதைக் கவனித்தார். இதனால் மனம் நொந்துபோன துணை முதல்வர் கல்யாண், கிராமத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை விசாரித்தார். சுமார் 350 பேர் வசிப்பதாகத் தெரிந்ததும், அனைவருக்கும் காலணிகள் வழங்க ஏற்பாடு செய்தார்.

அரசியல் போர்களத்தில் மலர்ந்த காதல்: 60 வயதில் காதல் திருமணம் செய்த பாஜக தலைவர்! யார் இவர்? என்ன செய்தார்?

34
pawan kalyan, Pedapadu village

பெடபடு கிராமத்த்தில் உள்ள அனைத்து மக்களையும் கணக்கெட்டுக்கு அனைவருக்கும் உடனடியாக காலணிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பணியில் இறங்கிய அதிகாரிகள் சுமார் 350 மக்களுக்கு தேவையான காலணிகளை வாங்கி பெடபடு கிராமத்துக்கு நேரடியாக சென்று வழங்கினார்கள். 

இதற்கு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். "எங்கள் பவன் சார் வந்து எங்கள் கஷ்டங்களைப் புரிந்து கொண்டார்" என்று கிராம மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கூறினர். வேறு எந்தத் தலைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தியதில்லை என்றும், தங்கள் கிராமத்திற்கு வருகை தந்து தங்கள் கஷ்டங்களைத் தீர்த்த துணை முதல்வருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
பெடபடு கிராம மக்களுடன், டம்பிரிகுடா மண்டலம் முழுவதும் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்தது.

44
Pawan Kalyan, Andhra Pradesh People

பவன் கல்யாணின் இந்த செயல் ஆந்திர பிரதேசம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. ஆந்திர துணை முதல்வராக பதவியேற்றது முதல் பவன் கல்யாணின் பணிகள் சிறப்பாக இருப்பதாக மக்கள் பாராட்டுகின்றனர். கிராமங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பவன் கல்யாண் அங்குள்ள குறைகளை கேட்டறிந்து அதை உடனடியாக நிவர்த்தி செய்து வருவதாகவும், அதிக புகார்கள் வரும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஜிபிஎஸ் சுங்கக் கட்டணம் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories