இந்தியாவுக்கு 40-50 விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது இந்த கருத்தை தெரிவித்தார்.
எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்காக, இந்தியாவுக்கு 40-50 விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் 20 நாட்கள் விண்வெளியில் இருந்து திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது இந்த கருத்தை தெரிவித்தார். இந்த சந்திப்பின் வீடியோ நேற்று வெளியானது.
24
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி அனுபவம்
அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
சந்திப்பின்போது, தனது விண்வெளிப் பயண அனுபவங்களை சுக்லா பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார். ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் (மைக்ரோ-கிராவிட்டி) உடலை சரிசெய்தல், விண்வெளி ஆய்வகத்தில் சோதனைகளை நடத்துதல் போன்ற பல அனுபவங்களை அவர் விவரித்தார்.
34
இந்தியாவின் எதிர்கால விண்வெளி இலக்குகள்
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், விண்வெளித் துறையில் மேலும் ஆர்வம் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ககன்யான் திட்டம் மற்றும் பாரதிய அந்தரிக்ஷா நிலையம் (இந்திய விண்வெளி நிலையம்) போன்ற இரண்டு பெரிய திட்டங்கள் உள்ளன என்றும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த சுக்லா, இந்தியாவின் ககன்யான் திட்டம் உலக அளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். சந்திரயான்-2 தோல்விக்குப் பிறகும் விண்வெளி திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்ததன் முக்கியத்துவத்தை அவர் பாராட்டினார். இதுவே சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் தலைமையில் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் ஒரு விண்வெளி நிலையம், விண்வெளித் துறையில் இந்தியா ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.