Published : Jul 30, 2025, 04:11 PM ISTUpdated : Jul 30, 2025, 04:14 PM IST
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணைத் தொகை ஆகஸ்ட் 2 ஆம் தேதி 9.70 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும். 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.2,000 நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20-வது தவணைத் தொகை விடுவிக்கப்படும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி தவணைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
24
4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000
மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம், ஆண்டுக்கு ரூ.6,000/- மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
34
ரூ.3.69 லட்சம் கோடி
இதுவரை, இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு 19 தவணைகளாக மொத்தம் 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 20-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.
20-வது தவணைத் தொகையாக, 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார். இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விடுவிப்பு விவசாயிகளின் அன்றாட தேவைகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.