ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சக்ரா டயலாக்ஸ் ஃபவுண்டேஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட இழப்புகள் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் எட்டு F-16 ரக போர் விமானங்களும், நான்கு JF-17 ரக போர் விமானங்களும் சேதமடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.பாகிஸ்தானின் இரண்டு CM – 400 ஏவுகணைகள், இரண்டு ஷாஹீன் ஏவுகணைகள், 6 ஆளில்லா போர் விமானங்கள் உள்ளிட்டவையும் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
26
பாகிஸ்தான் விமானப்படைக்கு பெரும் இழப்பு
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக 524 புள்ளி 72 மில்லியன் அமெரிக்க டாலரும், தரை வழி தாக்குதலில் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிற்கும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் C-130H ஹெர்குலஸ் விமானம், அதிநவீன HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவையும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்துரின் போது, பாகிஸ்தான் விமானப்படைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்திய விமானப்படை முன்னாள் விங் கமாண்டர் சத்யம் குஷ்வாஹா தலைமையில் நிறுவப்பட்ட டெல்லியை மையமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான 'சக்ரா டயலாக்ஸ் ஃபவுண்டேஷன்' (CDF) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
36
ரூ.30,000 கோடி இழப்பு
பல்வேறு ரகசிய ஆவணங்கள், செயற்கைக்கோள் படங்கள், ISR தரவுகள் மற்றும் சர்வதேச ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஆய்வில், பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சொத்து இழப்புகள் மற்றும் அதன் நிதி விளைவுகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, மொத்த இழப்பு 3.35 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ரூ.30,000 கோடி .
இந்த இழப்புகளில் பெரும்பாலானவை வான் சண்டைகளில் ஏற்பட்டவை. நான்கு F-16 பிளாக் 52D போர் விமானங்கள், Saab 2000 Erieye AEW&C விமானம், ஒரு எரிபொருள் டேங்கர், இரண்டு சீன தயாரிப்பு ஏவுகணைகள், இரண்டு ஷாஹீன் ஏவுகணைகள் மற்றும் ஆறு Bayraktar UCAVகள் இழக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு 525 மில்லியன் டாலர்கள்.
56
உள்கட்டமைப்பு சேதம்
இந்த இழப்புகளுடன், எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிக்கைகளில் தரைப்படை இழப்புகள், பணியாளர் திறன் இழப்பு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஆகியவை சேர்க்கப்படும் என்று CDF தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆபரேஷன் சிந்துரால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 3.35 பில்லியன் டாலர்கள்.
66
புதிய உத்திகள் வெற்றி தரும்
சத்யம் குஷ்வாஹா கூறுகையில், இந்த ஆய்வுகள் எதிர்கால உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், உளவுத்துறை மற்றும் தரவு சார்ந்த சிந்தனையே நவீன போர்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார். அவரது தலைமையிலான CDF, தெற்காசியாவில் பாதுகாப்பு விஷயங்களில் பாரபட்சமற்ற, தரவு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு நம்பகமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.