மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், சக மாணவர்களால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் மகாராஷ்ராவில் மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி தன்னுடன் படிக்கும் 3 மாணவர்களுடன் இரவு தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காக அந்த மாணவி சென்றுள்ளார்.
23
கூட்டு பாலியல் பலாத்காரம்
திரையரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மது அருந்திய மாணவர்கள், மாணவிக்கும் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அது தெரியாமல் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயங்கினார். இதனையடுத்து 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியிடம் இது குறித்து வெளியில் சொன்னால் அவ்வளவு தான் மூவரும் மிரட்டியுள்ளனர்.
33
3 மாணவர்கள் சிறையில் அடைப்பு
ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து வந்த மாணவி நடந்த சம்பவம் தொடர்பாக பெலகாவியில் உள்ள தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.