டெல்லியில் கெஜ்ரிவால் 'ஹாட்ரிக்' வெற்றி; டஃப் கொடுக்கும் பாஜக; காங்கிரஸ் பரிதாபம்; பரபர கருத்து கணிப்பு!
இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாட்டின் அதிகார மையமாக வலம் வரும் டெல்லியை கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் இருக்கிறார்.
பல்வேறு மாநிலங்களில் வெற்றிக்கனியை பறித்துள்ள பாஜக, இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. தோல்வியையே வழக்கமாக கொண்டிருக்கும் காங்கிரஸ் இரு பெரும் கட்சிகளுக்கு டஃப் கொடுத்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என துடியாய் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்த மூன்று கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025
மேலும் தமிழ்நாட்டை போன்று மாதம்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை, பேருந்துகளில் இலவசம், மின் கட்டணத்தில் தள்ளுபடி என பல்வேறு இலவச கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கியுள்ளன. பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிப்பார். இல்லை பாஜக ஆட்சியை கைப்பறுகிறது என பல்வேறு கருத்து கணிப்புகள் உலா வருகின்றன.
இந்நிலையில், பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான பலோடி சத்தா பஜார் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என கணிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 38 முதல் 40 இடங்களை வென்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரியணையில் அமருவார் என பலோடி சத்தா பஜார் கணித்துள்ளது.
இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்து கணிப்பு
இதேபோல் பாஜக கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 30 முதல் 32 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மிக்கு டஃப் பைட் கொடுக்கும் என்றும் பலோடி சத்தா பஜார் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் காங்கிரஸின் நிலை படுமோசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் 0 முதல் 1 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என பலோடி சத்தா பஜார் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு
இதனால் ஆம் ஆத்ம்மி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கருத்து கணிப்பை ஏற்க முடியாது என்றும் தேர்தல் முடிவு வெளியாகும் பிப்ரவரி 8ம் தேதி தான் மக்களின் உண்மையான தீர்ப்பு தெரியவரும் என்றும் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். பலோடி சத்தா பஜார் என்பது கருத்து கணிப்பில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிறுவனமாகும்.
மக்களை தேர்தலில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூட்டணி ஆட்சியே அமைய வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு முன்பாக கணிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படியே மத்தியில் கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓயோ ரூம்ஸ் அதிகம் முன்பதிவு செய்யப்படும் நகரம் எது.? தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கா.?