டிக்கெட் கிடைக்கவில்லையா? இனி ரயிலில் ஏறிய பிறகும் டிக்கெட் எடுக்கலாம்!

Published : Apr 13, 2023, 07:45 AM ISTUpdated : Apr 13, 2023, 07:51 AM IST

பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே செய்து வருகிறது. அந்த வகையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கும் வசதியையும் ரயில்வே வழங்குகிறது.

PREV
15
டிக்கெட் கிடைக்கவில்லையா? இனி ரயிலில் ஏறிய பிறகும் டிக்கெட் எடுக்கலாம்!

ஒரு பயணி தனது டிக்கெட் உறுதி செய்யப்படாமலோ செல்லும் இடத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலோ ரயில்வே கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை கார்டு பேமெண்ட் மூலமும் செலுத்தலாம். இதற்காக ரயில்வே 4ஜி இணைப்பும் வழங்கப்படுகிறது.

25

டெபிட் கார்டு மூலம் ரயிலில் கட்டணம் அல்லது அபராதம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இப்போது உங்களிடம் ரயில் டிக்கெட் இல்லை என்றால், ரயிலில் ஏறிய பிறகு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

35

ரயில்வே விதிகளின்படி, முன்பதிவு செய்யாமல், ரயிலில் எங்காவது செல்ல வேண்டும் என்றால், நடைமேடை டிக்கெட் எடுத்து ரயிலில் ஏற முடியும்.

45

ரயிலில் டிக்கெட் பரிசோதகரை அணுகி மிக எளிதாக டிக்கெட்டுகளைப் பெறலாம். பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக டிக்கெட் பரிசோதகரைத் தொடர்புகொள்ள வேண்டும். அவர் உரிய தொகையைப் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை வழங்குவார்.

55

இதுவரை டிக்கெட் பரிசோதகர் வைத்திருக்கும் பாயிண்ட் ஆப் சேல் சாதனத்தில் 2ஜி சிம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இப்போது ரயில்வே 4G சிம் பயன்படுத்த தொடங்கியுள்ளது என்பதால் டிக்கெட்டுக்கான தொகையை எளிதாகச் செலுத்தலாம்.

click me!

Recommended Stories