ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) சுரேகா யாதவ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திங்கட்கிழமை, மும்பையில் உள்ள சோலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (சிஎஸ்எம்டி) வரைக்குமான வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம் இந்தச் சாதனைப் படைத்தார்.