Aero India 2023:ஏரோ இந்தியா விமானம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி: புகைப்படத் தொகுப்பு

Published : Feb 13, 2023, 01:01 PM IST

பெங்களூருவில் நாட்டின் மிகப்பெரிய விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 14-வது கண்காட்சி இன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேக் இன் இந்தியா முழுவத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் இந்த  கண்காட்சியைத் அமைகிறது.  

PREV
18
Aero India 2023:ஏரோ இந்தியா விமானம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி: புகைப்படத் தொகுப்பு
விமானம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 14-வது கண்காட்சி இன்று பெங்களூருவில் இன்று தொடங்கியது.  பிரதமர் மோடி, தொடங்கி வைத்து மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்த்தார்

 

28
மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஆதரவு

 உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், மே்க இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையில் கண்காட்சி இருக்கும்.
 

38
5 நாட்கள் கண்காட்சி

பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது. இதில் சர்வதேச நிறுவனங்களின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்  காட்சிப்படுத்தப்படும்.  விமான நிறுவனங்கள்,  பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தும்

48
110 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு

இந்தக் கண்காட்சியில் ரூ.75ஆயிரம் முதலீட்டுக்கான 251 ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள்,பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களிடையே கையொப்பமாகலாம். 98 நாடுகள் பங்கேற்கின்ற. 32 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளைச் சேர்ந்த விமானப்படைத் தளபதிகள், சர்வதேச நிறவனங்களைச் சேர்ந்த 73 சிஇஓக்கள் இதில் பங்கேற்கிறார்கள்

58
டிஆர்டிஓ அமைப்பு

இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு(டிஆர்டிஓ), 12 மண்டலங்களில் இருந்து 330 பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளது. போர் விமானம், யுஏவி, ஏவுகணைகள், எஞ்சின், உளவு செயல்முறைக் கருவிகள், நீர்வழி கருவிகள், சென்சார்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த உள்ளது

68
எச்ஏஎல் விமானங்கள் பங்கேற்பு

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடட் நிறுவனம், உள்நாட்டில் தயாரித்த அனைத்து வகையான லகுரக ஹெலிகாப்டர்களையும், பிரசந்த் என்ற இலகு ரக ஹெலிகாப்டரையும் காட்சிப்படுத்த உள்ளது.வானம் எல்லை அல்ல, வாய்ப்புகள் எல்லைகள் கடந்தும் உள்ளன என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

78
சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பு

26 நாடுகளின் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், குறிப்பாக போயிங், லாக்கிட் மார்டின், இஸ்ரேல் ஏரோ்ஸபேஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், லீப்ஹெர் குழுமம், ரேதியான் டெக்னாலஜிஸ், சப்ரான், காமி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இது தவிர இந்தியா சார்பில் பாரத் ஹெவிஎலெக்ட்ரானிக்ஸ்,  பாரத் டைனமிக்ஸ் லிமிட்டட், பிஇஎம்எல் லிமிடட், மிஸ்ராதத்து நிகம் லிமிடட் பங்கேற்கின்றன
 

88
5 லட்சம் பார்வையாளர்கள்

 பெங்களூருவில் உள்ள ஏலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் நடக்கும இந்த கண்காட்சியில் 809 நிறுவனங்கள்,  98 நாடுகளைச் சேர்ந்த 110 வெளிநாட்டு நிறுவனங்கள்  பங்கேற்கின்றன.சர்வதேச அளவில் நடக்கும் உலகளாவிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான கண்காட்சி என்பதால், 35ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது. 

click me!

Recommended Stories