பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் அதிக காலம் பணியாற்றிய முதல்வர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சிக்கிமின் பவன் குமார் சாம்லிங், ஒடிசாவின் நவீன் பட்நாயக் முதல் கருணாநிதி, ஜோதி பாசு போன்ற பல தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
10வது முறையாக பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், இந்தியாவில் அதிக காலம் பணியாற்றிய முதல் 10 முதலமைச்சர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் போன்ற அரசியல் ஜாம்பவான்கள் நிறைந்த இந்தப் பட்டியலில் நிதிஷ் குமார் இணைந்திருக்கிறது.
தற்போது, பீகார் முதலமைச்சராகப் பணியாற்றி வரும் நிதிஷ் குமார், தனது பல்வேறு ஆட்சிக் காலங்களில் சுமார் 19 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமையைப் பெற்றுள்ளார்.
25
சிக்கம், ஒடிசா
பவன் குமார் சாம்லிங்
அதிக காலம் முதலமைச்சராகப் பணியாற்றியவர்களின் பட்டியலில், சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் முதலிடத்தில் உள்ளார். இவர் டிசம்பர் 12, 1994 முதல் மே 26, 2019 வரை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகப் பணியாற்றினார்.
நவீன் பட்நாயக்
இவரைத் தொடர்ந்து, ஒடிசாவின் நவீன் பட்நாயக் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் மார்ச் 5, 2000 முதல் ஜூன் 11, 2024 வரை, 24 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்துள்ளார்.
35
மேற்கு வங்கம், அருணாச்சல்
ஜோதி பாசு
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, ஜூன் 21, 1977 முதல் நவம்பர் 5, 2000 வரை, 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கெகோங் அப்பங்
அருணாச்சல பிரதேசத்தின் கெகோங் அப்பங், மிசோரமின் லால் தன்ஹாலா இருவரும் வெவ்வேறு ஆட்சிக் காலங்களில் தலா 22 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின் வீரபத்ர சிங் பல்வேறு ஆட்சிக் காலங்களில் மொத்தமாக 21 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
மாணிக் சர்க்கார்
திரிபுராவின் மாணிக் சர்க்கார், மார்ச் 11, 1998 முதல் மார்ச் 9, 2018 வரை 19 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகப் பணியாற்றினார்.
நிதிஷ் குமார்
தற்போது பட்டியலில் இணைந்துள்ள பீகாரின் நிதிஷ் குமார் வெவ்வேறு காலங்களில் முதல்வராகப் பதவி வகித்தார். மொத்தமாக சுமார் 19 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார்.
55
தமிழ்நாடு, பஞ்சாப்
மு. கருணாநிதி
இவர்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பல ஆட்சிக் காலங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
பிரகாஷ் சிங் பாதல்
இப்பட்டியலில், பஞ்சாபின் பிரகாஷ் சிங் பாதல் பல்வேறு காலங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.