மூலதனச் செலவு அதிகரிப்பு
மேலும், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான 2024-25 நிதியாண்டில் அதன் மூலதனச் செலவு ரூ.240,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது வரை செலவு ரூ.250,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக NHAI தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. அரசாங்க பட்ஜெட் ஆதரவு மற்றும் NHAI-யின் சொந்த வளங்கள் இரண்டையும் சேர்த்து ஒரு நிதியாண்டில் NHAI-யால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினம் இதுவாகும்.
NHAI தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த மூலதனச் செலவு 2023-24 நிதியாண்டில் 207,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2022-23 நிதியாண்டில் 173,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.