பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக இன்று இந்தியா வருகிறார். அவருக்கு அகமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடைய வருகையால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ட்ரம்ப் வந்து இறங்கியதும், அவரை கட்டி தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார் இந்திய பிரதமர் மோடி. பின் காந்தி ஆஸ்ரமம் சென்று அங்கு, காந்திஜியின் ராட்டை, அவர் வைத்திருந்த குரங்கு பொம்மை ஆகியவற்றை பார்த்து வியர்ந்தார். மேலும் ட்ரம்ப் செல்லும் வழி நெடுக்க, அவருக்கு இந்தியாவின் பெருமைகளை எடுத்து கூறும் வகையில் கலைஞர்கள் நடனமாடியும், அமெரிக்க கோடியை அசைத்தும் வரவேற்றனர். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு...