Published : Nov 22, 2025, 11:05 PM ISTUpdated : Nov 22, 2025, 11:08 PM IST
ஒரு இஸ்லாமியர் அமெரிகாவில் மேயராக கூட முடியும். ஆனால் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கூட முடியாது என மௌலானா அர்ஷாத் மதானி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்ப சம்பவத்தில் 15 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பின்னணி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆம். இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது ஒரு மருத்துவர் என்ற தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் உறையச் செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்களை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25
மருத்துவர் உமர் நபி
இச்சம்பவத்தை நிகழ்த்திய உமர் நபி ஹரியானா மாநிலத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் படித்தவர். அருடன் படித்த மேலும் சிலர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் தாக்குதல் சம்பவம் நடத்தப்படுவதற்கு முன்பாக உமர் நபி தற்கொலை படை தாக்குதல் என்பது புனிதச் செயல் என்பது போல குறிப்பிட்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் நோக்கில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார்.
35
அல் பலா பல்கலைக்கழகம்
இந்நிலையில் உமர் பயின்ற அல் பலா பல்கலைக்கழகம் முழுவதுமாக தேசிய பாதுகாப்பு புலமையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழத்தில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா சையத் அர்ஷத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், “முஸ்லிம்கள் உதவியற்றவர்களாகவும், நிர்மூலமாகவும், தரிசாகவும் மாறிவிட்டதாக உலகம் நினைக்கிறது. நான் அப்படி நம்பவில்லை. இன்று, ஒரு முஸ்லிம் மம்தானி நியூயார்க்கின் மேயராக முடியும், ஒரு கான் லண்டனின் மேயராக முடியும், ஆனால் இந்தியாவில், யாரும் பல்கலைக்கழக துணைவேந்தராகக் கூட ஆக முடியாது. யாராவது அவ்வாறு செய்தாலும், அவர்கள் ஆசம் கானைப் போல சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இன்று அல்-ஃபாலாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்... முஸ்லிம்கள் ஒருபோதும் தலை தூக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது..." என்று தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
55
பாஜக தலைவர் குற்றச்சாட்டு
மௌலானா சையத் அர்ஷத்தின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர், மொஹ்சின் ராசா கூறுகையில், "... அர்ஷத் மதானியும் அவரது குடும்பத்தினரும் நாட்டின் முஸ்லிம்களைக் கொள்ளையடித்து, பழி அரசியல் செய்துள்ளனர். இது மிக நீண்ட காலமாக அவர்களின் இரட்டை குணமாக இருந்து வருகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக முஸ்லிம் சிறுபான்மையினரின் பெயரில் மானியங்களைப் பெற்று வந்தனர், ஆனால் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை..” என்ற கருத்து தெரிவித்துள்ளார்.