ஒரு வருஷமாக பிரிந்திருந்த தம்பதி! ஏக்கத்தில் கணவர்! அதுக்கு மறுத்த மனைவி! அடுத்து நடந்த பயங்கரம்!

Published : Oct 07, 2025, 12:11 PM IST

கர்நாடகாவில், பிரிந்து வாழ்ந்த மனைவியை சமாதானம் செய்ய வந்த கணவர், தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, கணவரே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

PREV
14
கணவர் மனைவி தகராறு

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா அடுத்துள்ள டோனிகரா பகுதியைச் சேர்ந்தவர் மாரம்மா (35). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா(40) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

24
வாக்குவாதம்

இந்நிலையில் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்தது போதும் மனைவியை சமாதானம் செய்ய கணவர் சங்கப்பா சுராபுராவிற்கு வந்துள்ளார். பின்னர் கணவர் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

34
மனைவி கொலை

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டில் இருந்த கோடரியால் மாரம்மாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாரம்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் மனைவியை கொலை செய்த கணவர் சங்கப்பா பயத்தில் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

44
கணவர் கைது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவர் சங்கப்பா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உல்லாசத்துக்கு மறைத்த மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories