49 பெண்களுக்கு காதல் வலை, 5 முறை திருமணம்; காதல் மன்னனை பொறி வைத்து பிடித்த போலீஸ்

First Published | Aug 4, 2024, 1:59 PM IST

ஒடிசா மாநிலத்தில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வரன்

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால்(வயது 34). திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் பதிவு செய்யும் விதவைகள், விவகாரத்தான பெண்களை குறி வைத்து சமால் தனது காதல் வலையை விரித்துள்ளார். இதில் மயங்கும் பெண்களிடம் தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நட்பாக பழகத் தொடங்கி உள்ளார்.

5 திருமணம்

பின்னர் அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் இதே முறையை பயன்படுத்திய சமால் இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். திருமணம் செய்து கொண்டு பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகக் கூறி இரு பெண்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tap to resize

பொறி வைத்த போலீஸ்

ஒரே நபர் மீது இரு பெண்கள் வெவ்வேறு நேரங்களில் புகார் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சமாலை கைது செய்ய திட்டமிட்ட காவல் துறையினர், பெண் போலீஸ் அதிகாரியின் தகவல்களை வரன் பார்க்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை பார்த்து தொடர்பு கொண்ட சமாலை லாவகமாக பேசி கைது செய்தனர். 

மோசடி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தமாக 49 பெண்களுடன் சமால் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு பெண் சுமார் 8 லட்சம் வரையில் அவர் பெயரில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கி உள்ளார். வேறொரு பெண் சுமார் 30 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்காக சமாலுக்கு வழங்கி உள்ளார். 

கைது

கைது செய்யப்பட்ட சமாலிடம் இருந்து ஒரு கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos

click me!