மகா கும்பமேளா 2025ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பூடான் மன்னர் புனித நீராடல்!

Published : Feb 04, 2025, 03:17 PM IST

MahaKumbh Mela 2025: பூடான் மன்னர் ஜிக்மே கெசர் நாம்கியல் வாங்சுக், முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனித நீராடல் மற்றும் மதச் சடங்குகளைச் செய்தார்.

PREV
15
மகா கும்பமேளா 2025ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பூடான் மன்னர் புனித நீராடல்!
பூட்டான் மன்னர் மகா கும்பமேளாவில் யோகியுடன் நீராடல்

MahaKumbh Mela 2025: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் 26ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பிரபலங்களும் இந்த மகா கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.

25
ஜிக்மே கெசர் நாம்கியல் வாங்சுக் கங்கை பூஜை

கடந்த சில தினங்களுக்கு முன்பு தை அமாவாசை நாளன்று கடுக்கடங்காத கூட்டம் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் பெரியளவில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து வசந்த பஞ்சமி நாளில் பக்தர்கள் தங்களது குடும்பத்தினர் தொலைந்து போகாமல் இருக்க அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது.

35
லேட் ஹனுமான் கோயில் தரிசனம்

இதற்காக கிட்டத்தட்ட 52000க்கும் அதிகமான மின்கம்பங்கள் மூலமாக க்யூ ஆர் கோட் மூலம் உதவகள் பெற்றுக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித் ஷா கும்பமேளாவில் புனித நீராடிய நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.

45
அக்ஷயவாட் தரிசனம்

இந்த நிலையில் தான் பூடான் நாட்டு மன்னரும் மகா கும்பமேளாவில் புனித நீராடி மகிழ்ந்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பூடான் மன்னர் ஜிக்மே கெசர் நாம்கியல் வாங்சுக் சங்கமத்தில் புனித நீராடினர். இது மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தருணம். சங்கமத்தில் நீராடிய பின், இரு தலைவர்களும் கங்கை பூஜை செய்தனர், கங்கை நதியின் கரையில் மதச் சடங்குகளைச் செய்தனர். சங்கமத்தில் நீராடிய பின், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பூடான் மன்னர் லேட் ஹனுமான் கோயிலில் வழிபடச் சென்றனர்.

55
பறவைகளுக்கு உணவளித்தல்

இரு தலைவர்களும் அக்ஷயவாட் சென்றனர், இது மகா கும்பமேளாவின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாகும். லக்னோவிலிருந்து விமானம் மூலம் பமரௌலி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக மகா கும்பமேளாவுக்குப் புறப்பட்டார். சங்கமத்தில் நீராடிய பின், பூடான் மன்னர் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பறவைகளுக்கு உணவளித்தனர். மகா கும்பமேளாவின் 23வது நாள் வரை சுமார் 37 கோடி பக்தர்கள் சங்கமத்தில் நீராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories