குஜராத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்! ரூ.3,000 கோடி முதலீடு!

Published : Apr 20, 2025, 12:29 PM ISTUpdated : Apr 20, 2025, 01:10 PM IST

லுலு குழுமம் குஜராத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டுகிறது. 18,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்த மால், 300+ பிராண்டுகள், 15 திரை ஐமாக்ஸ் தியேட்டர் மற்றும் பரந்த உணவு அரங்கத்தைக் கொண்டிருக்கும்.

PREV
14
குஜராத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்! ரூ.3,000 கோடி முதலீடு!
Lulu mall

அகமதாபாத்தில் லுலு மால்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த கோடீஸ்வரரான யூசுப் அலியின் லுலு குரூப் இன்டர்நேஷனல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் அமைக்க உள்ளது. இதற்காக ரூ.3,000 கோடி முதலீடு செய்துள்ளது.

24
Lulu mall

18 ஆயிரம் வேலைவாய்ப்புகள்:

லுலு குழுமத்தின் பிரமாண்டமான ஷாப்பிங் மால் திட்டம் 18,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குஜராத்தின் பொருளாதார நிலையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

34
Lulu Group V Nandakumar

அதிநவீன வசதிகள்:

அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ஷாப்பிங் மால் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்று லுலு குழும சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் வி. நந்தகுமார் உறுதிப்படுத்தி இருக்கிறார். "இந்தியாவின் மிகவும் வளமான ஷாப்பிங் இடங்களில் ஒன்றாக அகமதாபாத்தை மாற்றுவதே எங்கள் நோக்கம். இந்த ஷாப்பிங் மால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் ஒரு மைல்கல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என நந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

44
Ahmedabad Lulu mall project

300 க்கும் மேற்பட்ட பிராண்டுகள்:

இந்த மெகா மாலில் 300க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய பிராண்டுகள் விற்பனை செய்யப்படும். 15 திரைகள் கொண்ட ஐமாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரும் இருகுகம். 3,000 பேர் அமரக்கூடிய ஒரு பரந்த உணவு அரங்கம், இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் பொழுதுபோக்கு மண்டலம் ஆகியவையும் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories