45 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே

Published : Apr 20, 2025, 11:38 AM IST

கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பாக மாணவர்களின் பயண வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை - பாகத் கி கோதி, சென்னை - பாகத் கி கோதி மற்றும் நெல்லை - நிஜாமுதீன் வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

PREV
14
45 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே

Summer Holiday special trains : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வானது முன்கூட்டியே முடிக்கப்பட்டு பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோடை வெயிலின் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களோடு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

24
Tirunelveli Nizamuddin train

கோடை விடுமுறை- சிறப்பு ரயில் அறிவிப்பு

இதன் படி. மதுரையில் இருந்து பாகத் கி கோதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாகத் தி கோதிக்கும், நெல்லையில் இருந்து நிஜாம்தீனுக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,  மதுரையில் இருந்து பாகத் கி கோதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  இந்த ரயிலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  

இந்த ரயில் வருகின்ற 21ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10:45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலானது மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் எலும்பூர்,  நெல்லூர், விஜயவாடா வழியாக பாகத் கி கோதி சென்று சேருகிறது.

34
Chennai Bhagat Ki Kothi train

மதுரை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்

இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பகத் போதிக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படவுள்ளது. ரயில் எண்  06057/06058 இன்று இரவு  (ஏப்ரல் 20ஆம் தேதி ) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா வழியாக பாகத் கி கோதி சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயிலி மறுமார்க்கத்தில் 23ஆம் தேதி  பாகத் கி கோதி புறப்பட்டு சென்னை வந்தடைகிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றும், 3ஆம் வகுப்பு ஏசி பெட்டி 16, முன் பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

44
summer vacation special trains

சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது

மற்றொரு சிறப்புகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து நிஜாமுதீன் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. (Train No. 06161 ) ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, எக்மோர், விஜயவாடா வழியாக கஷரத் நிஜாமுதீனை சென்று சேருகிறது இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட 20 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories