ஒணம் லாட்டரி பம்பர் குலுக்கல்! ரூ.25 கோடியில் வரிப் பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும்?

First Published | Oct 9, 2024, 1:52 PM IST

ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும். முதல் பரிசு ரூ.25 கோடி பெறும் நபர் வரிப்பிடித்தம் போக எவ்வளவு பணத்தைப் பெறுவார் என்று பார்க்கலாம்.

Kerala Lottery Thiruvonam Bumper Rs 25 Crore Results

கேரளா மாநிலத்தின் ஓணம் லாட்டரி பம்பர் குலுக்கல்  இன்று நடைபெறுகிறது. கேரள நிதியமைச்சர் கே. என். பாலகோபால் முன்னிலையில் இந்த குலுக்கல் நடத்தப்படுகிறது. விரைவில் ரூபரிசு வெல்லப்போகும் வெற்றியாளர்கள் யார்யார் என்று அறிவிக்கப்படவுள்ளது.

Kerala Lottery Result BR-99

இந்த ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும். இதனால் அந்த மாநில மக்கள் போட்டி போட்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்துள்ளனர். பிற்பல் 2 மணி அளவில் குலுக்கல் முடிவுகள் அறிவிப்பு வெளிவரும். இந்நிலையில் முதல் பரிசு ரூ.25 கோடி பெறும் நபர் வரிப்பிடித்தம் போக எவ்வளவு பணத்தைப் பெறுவார் என்று பார்க்கலாம்.

Tap to resize

kerala lottery Thiruvonam Bumper Result BR-99 terms and conditions, shared tickets

கேரள லாட்டரி திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் 25 கோடி ரூபாய் பரிசு பெறும் நபர் வரிப்பிடித்தம் போக ரூ.12 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பெறுவார் என்று கூறப்படுகிறது. பரிசுத்தொகையில் டிடிஎஸ் (TDS) 30%, முகவர் கமிஷன் 10% பிடித்தம் செய்யப்படும். இது தவிர கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செஸ் வரி ரூ.36,99,000 பிடித்துக்கொள்ளப்படும். கேரள லாட்டரி துறை ரூ.2,49,75,000 பிடித்தம் செய்துவிடும்.

Onam Lottery Results

இந்தப் பிடித்தங்கள் போக, மீதி தொகைதான் வெற்றியாளர் கைக்கு வந்து சேரும். அதாவது ரூ.12,88,26,000 கையில் கிடைக்கும். திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியில் முதல் பரிசு 25 கோடி ரூபாய் தவிர, முதல் பரிசு டிக்கெட்டை விற்பனை செய்த முகவருக்கான கமிஷன் தொகை ரூ.2.5 கோடி கிடைக்கும்.

Kerala Lottery Results 2024

இந்தக் பம்பர் குலுக்கலில் இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இந்த 20 லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த முகவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் கமிஷன் தொகை கிடைக்கும். மூன்றாவது பரிசும் 20 பேருக்கு வழங்கப்படும். அவர்கள் தலா ரூ.50 லட்சம் பெறுவார்கள். இந்த டிக்கெட்டுகளை விற்றவர்களுக்கு கமிஷனாக தலா ரூ.5 லட்சம் கிடைக்கும்.

Kerala Lottery Thiruvonam Bumper Results

4வது பரிசு 5 லட்சம் ரூபாய், 5வது பரிசு ரூ.2 லட்சம், 6வது பரிசு ரூ.5000, 7வது பரிசு ரூ.2,000 ரூபாய், 8வது பரிசு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. 9வது பரிசாக ரூ.500 கிடைக்கும். ஆறுதல் பரிசு 9 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

Latest Videos

click me!