இந்தியா வளரும் நாடாகக் கருதப்பட்டாலும் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஒவ்வொரு வேளை உணவுக்கும் கஷ்டப்படும் நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. அப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், மண்ணெண்னை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.