கன்னியாகுமரி, தமிழ்நாடு: கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடியில் உள்ளது. இந்தியாவிலேயே கன்னியாகுமரிதான் சூரிய அஸ்தமனத்தைக் காண மிகச் சிறப்பான இடமாக இருக்கும். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் காட்சியையும் காணலாம். மகேந்திரகிரி மலையில் மலையேற்றமும் செய்யலாம்.