ரயில் பயணிகளுக்கு நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாடு வழங்கும் இந்திய ரயில்வே!

First Published | Oct 9, 2024, 12:22 PM IST

நவராத்திரி முன்னிட்டு இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பு உணவு தயாரித்து வழங்குகிறது. 150க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கான சிறப்பு உணவு கிடைக்கும்.

Indian Railways Navratri Special

பண்டிகைக் கால மகிழ்ச்சியை இப்போது இந்திய ரயில் நிலையங்களிலும் காணலாம். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, ரயில் ​​பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே 150க்கும் மேற்பட்ட நிலையங்களில் விரதச் சாப்பாட்டை வழங்குகிறது.

Indian Railway Food

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விசேஷமான சில கோயில்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. மேலும் நவராத்திரி நாட்களில், ரயில் பயணிகளுக்கு விரத நாளில் உண்ணும் சைவ உணவையும் ஏற்பாடு செய்து தருகிறது.

ரயில்வேயின் கூற்றுப்படி, 'நவராத்திரி சிறப்பு சாப்பாடு' 150 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் கிடைக்கிறது. பயணிகள் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் இந்த உணவைப் பெற ஆர்டர் செய்யலாம்.

Tap to resize

Railway food menu

இந்திய ரயில்வே 150க்கும் மேற்பட்ட நிலையங்களில் நவராத்திரி விரத சிறப்பு உணவை வழங்குகிறது. நவராத்திரியின் போது பயணம் செய்யும் பயணிகள் இப்போது உணவு பற்றிய கவலையிலிருந்து விடுபடலாம். பயணத்தில் சுவையான விரதச் சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட்டு வருகின்றனர்.

Navratri thali in Trains

கிழக்கு மத்திய ரயில்வே மண்டல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, பாட்னா சந்திப்பு, மும்பை சென்ட்ரல், டெல்லி சந்திப்பு, சூரத், ஜெய்ப்பூர், லக்னோ, லூதியானா, துர்க், சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிலையங்களில் நவராத்திரி சிறப்பு சாப்பாடு கிடைக்கும்.

Navratri special thali

அமராவதி, ஹைதராபாத், திருப்பதி, ஜலந்தர் சிட்டி, உதய்பூர் நகரம், பெங்களூரு கான்ட், புது தில்லி, தானே, புனே, மங்களூர் மத்திய நிலையம் ஆகியவற்றிலும் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். ஆன்லைனிலும் மொபைல் ஆப் மூலமாகவும் பயணிகள் இந்த வசதியைப் பெறலாம்.

நவராத்திரி பண்டிகைக்காக, இந்த சிறப்பு விரத உணவு சிறப்பாக தயாரிக்கப்படுகிறது என்றும் இதில் தரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

How to order Navratri special thali?

இந்திய ரயில்வேயின் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாட்டை ஆர்டர் செய்யும் முறை மிகவும் எளிமையானது. பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) செயலிக்குச் சென்று, அவர்களின் PNR எண்ணை டைப் செய்து விரத உணவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். ரயில்வேயின் இ-கேட்டரிங் தளத்திற்குச் சென்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். குறுகிய காலத்தில், முற்றிலும் புதிய மற்றும் சுத்தமான விரத உணவு உங்களுக்குக் கிடைக்கும்.

Latest Videos

click me!